DEFEAT THE DEFEAT BEFORE THE DEFEAT DEFEATS YOU

Sunday, October 23, 2011

மிக்சர் கடை(23/10/11)


வல்லவனுக்கு வல்லவன்:

நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டரை ஆண்டுகள் உள்ளது. அதற்குள் தமிழக காங்கிரசை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்" - A.B.C.D இளங்கோவன் உறுதி.
                                                                    
"என்னாது மக்கள் இயக்கமா மாத்துவீங்களா? இந்த வருசம் அட்லீஸ்ட் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதாவது வாங்கலாம்னு பாத்தா அதுலயும் மண்ணை அள்ளி போட்டுட்டாரே இந்தாளு.." -இள்ய தள்பதி. 
...................................................................................

மஞ்சள் மகிமை:

                                             இன்று கோப்பையை வென்ற ஆஸி ஆணி     

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த சர்வதேச சூப்பர் சீரிஸ் ஹாக்கி போட்டி இன்று முடிவுக்கு வந்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது ஆச்சர்யம் இல்லைதான். இந்திய மகளிர் ஆஸி அணியிடம் 4-1 எனும் கோல் கணக்கில் தோற்றனர். ஆண்கள் பிரிவில் அதைவிட கொடுமை. வெண்கல பதக்க போட்டியில் அதே கோல் கணக்கில்(4-1) பாகிஸ்தானிடம்  தோற்றுள்ளார்கள் இந்திய வீரர்கள். 
.................................................................................

அரச கட்டளை:  

தீபாவளியை முன்னிட்டு ஏற்கனவே பகலில் இருக்கும் ஒரு மணிநேர மின்வெட்டு போனஸ் நமக்கு போதாதாம். எனவே 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' எனும் நல்லெண்ண அடிப்படையில் இரவிலும் ஒரு மணி நேர (விலையில்லா) மின்வெட்டை அமுல்படுத்தி உள்ளனராம். சென்னை நீங்கலாக மட்டுமே இந்த சிறப்பு போனஸ் தரப்படுமாம். எஸ்கேப்டாங்கப்பா!
.................................................................................

பயணம்: 

                                                                   
சிறந்த படம், நடிகர், ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசைக்கான நான்கு தேசிய விருதுகளை இவ்வாண்டு வென்ற  ADAMINTE MAKAN ABU எனும் மலையாள  படத்தை பார்க்கும் ஆவல் விருது அறிவிக்கப்பட்ட நாள் முதலே இருந்தது. ஆனால் தியேட்டர் அல்லது டி.வி.டி.யில் காணும் வாய்ப்பு கிட்டவில்லை. கேரளா நண்பருடன் நேற்றுதான் பார்த்தேன். இதற்கு முன் முழுதாக பார்த்த மலையாளப்படங்கள் இரண்டு மட்டுமே: மம்முட்டி நடித்த காழ்ச்சா மற்றும் பிருத்விராஜ் நடித்த இண்டியன் ருபீ.

இப்படத்தில் நடித்த சலீமை டி.வி.யில் எப்போதோ பார்த்த ஞாபகம். அதுவும் நகைச்சுவை வேடங்களில் ஓரிரு நிமிடங்கள் மட்டும். ஆனால் அவரிடம் இருந்து இப்படி ஒரு நடிப்பு! அசத்தல். வாழ்வில் ஒரு முறையேனும் ஹஜ் யாத்திரை செல்ல விரும்பும் வசதியற்ற தம்பதியர் தம்மிடம் இருக்கும் ஒரு சில சொத்துக்களையும் விற்க முயல்கின்றனர். ஹஜ் செல்ல சேர்க்கும் பணம்  நேர்மையாகவும், கடன் வாங்காமலும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவர்களின் எண்ணம் நிறைவேறியதா? என்பதுதான் படத்தின் கதை. நிஜத்தில் 43 வயது ஆளாக இருப்பினும் 70 வயதுடைய கதாபாத்திரத்தை ஏற்று அற்புதமாக நடித்துள்ளார் சலீம்.

                                                                 நிஜத்தில் சலீம் குமார்

இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு செல்கிறது இப்படம். மதர் இந்தியா, லகான் மற்றும் சலாம் பாம்பே ஆகிய படங்கள் இதற்கு முன் ஆஸ்கர் இறுதிக்கட்டம் வரை சென்று தோற்றுள்ளன. இந்திய திரை உலகிற்கு சிறந்த வெளிநாட்டு படத்திற்கான முதல் ஆஸ்கர் விருது இப்படத்தின் மூலம் கிடைத்தால் மகிழ்ச்சியே. பார்க்கலாம். 
.....................................................................................

எதிரும் புதிரும்: 

                                                                        
RECESSION.....கேட்டாலே சும்மா அதிருதில்ல. ஒட்டுமொத்த உலகையே சில ஆண்டுகளுக்கு முன் புரட்டிப்போட்ட வார்த்தை. லட்சம் லட்சமாக மாத சம்பளம் வாங்கிய உயர் அதிகாரிகளைக்கூட வேலையின்றி தெருவில் நிற்க வைத்த பொருளாதார பேரிடியை மையமாக கொண்ட படமான UP IN THE AIR - ஐ பார்க்கும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது. ''வணக்கம். நலமா? இன்று முதல் உங்களுக்கு வேலை இல்லை. YOU ARE FIRED" என்று பக்குவமாகவும் அதே சமயம் தீர்க்கமாகவும் சொல்ல வேண்டிய அதிகாரி  ரோலில் பட்டையை கிளப்பி உள்ளார் ஜார்ஜ் க்ளூனி. 

வருடத்தின் 90% மேற்பட்ட நாட்களில் அமெரிக்கா முழுதும் பயணம் செய்து ஆட்களை வேலையை விட்டு தூக்குகிறார் ஜார்ஜ். "இவருக்கு ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும்? அதையும் வெகுவாக மிச்சப்படுத்தலாமே?" என்று ஜார்ஜுக்கு ஆப்பு வைக்கும் ரோலில் அன்னா கென்ட்ரிக். செம காரமான ரோலில் கச்சிதமாக பொருந்துகிறார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆட்களை தூக்கலாம் என்று அவர் கூற, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் ஜார்ஜ். வேலையை விட்டு தூக்கும்போது அந்த ஊழியர்களின் மனநிலையை   வீடியோ மூலம் உணர முடியாது என்கிறார் அவர். எனவே அதை நேரில் காண ஜார்ஜுடன் பயணிக்கிறார் அன்னா. வேலை போய்விட்ட அதிர்ச்சியை வெவ்வேறு வழிகளில் பிரதிபலிக்கும் ஊழியர்களை கண்ட பின்பு யதார்த்த நிலையை உணர்கிறார் அன்னா. சிம்பிளாக சொல்கிறேன்: DON'T MISS.

தொடர்புடைய பதிவு:

.................................................................................

கொண்டாட்டம்:

பாவம் நரகாசுரன் அண்ணாத்த. அவர் போயி சேந்ததுக்கு இன்னைக்கி வரைக்கும் ஆட்டம் போடுறாங்க நம்ம ஆளுங்க. எங்கப்பா போனீங்க மனித/அரக்க உரிமைக்கழக ஆளுங்க எல்லாம். ரங்கநாதன் தெருவுல தலைல கால் வச்சி எல்லாம் ஓடுற அளவுக்கு நேத்தும் இன்னிக்கும் செம கூட்டமாம். நல்லா இருக்குற சட்டையை கிழிச்சிக்கிட்டு ஆபர்ல போடுற சுமாரான சட்டைய வாங்க என்னா கூட்டமடா சாமி? பொங்கல் வரைக்கும் அங்க இருக்குற ட்ராபிக் போலீஸ் தீயா வேலை செய்யணும் பாவம்.

இப்பயே வீட்டு கிட்ட இருக்குற நண்டுங்க எல்லாம் டப்பாசு கொளுத்த ஆரம்பிச்சிட்டாங்க. காலுக்கு கீழ சைலண்ட்டா வெடி வச்சிட்டு சாவகாசமா ''அண்ணா..பாத்து போங்க''ன்னு சொல்லுற பயலுகளை அப்படியே ராக்கெட் வெடில உக்கார வச்சி ஊரு கடத்தணும்னு தோணுது..
.........................................................................................

தலைநகரம்:


'மெட்ரோ ட்ரெயின் வரப்போகுது.ஓரம் போ ஓரம் போ' என்று கூவிக்கொண்டு சென்னையின் பல முக்கிய பூங்கா மற்றும் மைதானங்களை கொத்து பரோட்டா போட்டு விட்டனர். லட்சக்கணக்கில் செலவு செய்து அழகுபடுத்தப்பட்ட அண்ணா நகர் அருகில் இருக்கும் திரு.வி.க.பூங்கா, புதிய,பழைய முன்னாள் புதிய சட்டமன்றம், சைதை டீச்சர்ஸ் காலேஜ் மைதானம் எல்லாம் நகர மயமாக்கலுக்கு காவுகுடுக்கப்பட்டாகி விட்டது. இனிமேல் மைதானத்தை வீடியோ கேம்களிலும்,பூங்காக்களை ஒண்ணாப்பு பாடபுத்தகங்களிலும் மட்டுமே பார்க்கப்போகும் நாளைய சிட்டி(City) ரோபோக்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.   
........................................................................................

அபூர்வ சகோதரர்கள்:

                                                   இன்றைய வெற்றிக்கோப்பையுடன்

இந்தியா - பாகிஸ்தான் என்ற வார்த்தைகளை கேட்டாலே இரு நாட்டவரும் முஷ்டியை தூக்கிக்கொண்டு முறைக்கும் யுகத்தில் அந்த வேற்றுமையை ஓரம் கட்டிவிட்டு டென்னிஸில் தூள் பறத்துகின்றனர் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் பாகிஸ்தானின் ஐசாம் குரேஷி. இந்த இணை கடந்த சில வருடங்களாக இரட்டையர் டென்னிஸில் வேகமாக முன்னேறி வருகிறது. இன்று நடந்த ஸ்டாக்ஹோம் ஓப்பன் இறுதிப்போட்டியில் 6-1, 6-4 எனும் செட் கணக்கில் பிரேசில் வீரர்களை வீழ்த்தி பட்டத்தை வென்றுள்ளனர் இருவரும்.
..............................................................................................................
                                             
பசங்க:

முன்பை இவ்வாண்டு பட்டாசு விற்பனை வெகுவாக குறைந்து விட்டதென சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் கூறி உள்ளனர். சுற்றுச்சூழல் குறித்த  விழிப்புணர்வு மக்களிடையே நன்றாக பரவ ஆரம்பித்ததும், கல்வியின் மகத்துவம் அறிந்து பட்டாசு வேலைக்கு சிறார்கள் பலர் வராமல் இருப்பதுமே இந்த விற்பனை சரிவிற்கு காரணம் என்கிறார்கள். கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. தம்மாத்தூண்டு இருக்கையிலேயே பட்டாசு கொளுத்துவதை விட்டு விட்டேன். காரணம் பின்வருமாறு: ஒரு தீக்குச்சியோ அல்லது ஊதுவத்தியோ  பட்டாசை தீண்டலாம். அச்செயலை எரிமலை செய்தல் நியாயமல்லவே?
........................................................................................
  
எங்கு ஊரு பாட்டுக்காரன்:


பேருக்காக ஏதோ ஒரு டப்பா தியேட்டர்ல பகல் காட்சியா 175 நாளுக்கு மேலயும் படத்த ஓட்டுறது இந்தக்காலம். எங்க தல 'தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார்' தியாகராஜா பாகவதர் நடிச்ச ஹரிதாஸ் படம்(1944) சென்னை பிராட்வே தியேட்டர்ல மூணு தீபாவளி தாண்டி வெற்றி நடை போட்டுருக்கு.

அது மட்டுமா? என்னதான் பாரின்ல போய் ட்யூன் போட்டு காட்டு கத்து கத்துனாலும் இன்னைக்கு வரைக்கும் பீட் பண்ண முடியாத ரொமாண்டிக் சாங்கு மற்றும் ரொமாண்டிக் லுக்கு ரெண்டுமே எங்க தலைக்குதான் சொந்தம்.

உனக்கு இல்லாத ரசிகர்களா? நீ பாடு தலைவா..... 



....................................................................................



..................................................
 My other site:

madrasbhavan.com
..................................................



13 comments:

சண்முகம் said...

காரம் தூக்கலாக இருக்கு.............

மதுரை சரவணன் said...

theepavaliyai otti naalaave vanthullathu michchar..vaalththukkal

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாவம் நரகாசுரன் அண்ணாத்த. அவர் போயி சேந்ததுக்கு இன்னைக்கி வரைக்கும் ஆட்டம் போடுறாங்க நம்ம ஆளுங்க. எங்கப்பா போனீங்க மனித/அரக்க உரிமைக்கழக ஆளுங்க எல்லாம். ரங்கநாதன் தெருவுல தலைல கால் வச்சி எல்லாம் ஓடுற அளவுக்கு நேத்தும் இன்னிக்கும் செம கூட்டமாம். நல்லா இருக்குற சட்டையை கிழிச்சிக்கிட்டு ஆபர்ல போடுற சுமாரான சட்டைய வாங்க என்னா கூட்டமடா சாமி? பொங்கல் வரைக்கும் அங்க இருக்குற ட்ராபிக் போலீஸ் தீயா வேலை செய்யணும் பாவம்.

இப்பயே வீட்டு கிட்ட இருக்குற நண்டுங்க எல்லாம் டப்பாசு கொளுத்த ஆரம்பிச்சிட்டாங்க. காலுக்கு கீழ சைலண்ட்டா வெடி வச்சிட்டு சாவகாசமா ''அண்ணா..பாத்து போங்க''ன்னு சொல்லுற பயலுகளை அப்படியே ராக்கெட் வெடில உக்கார வச்சி ஊரு கடத்தணும்னு தோணுது..//

அடபாவி டிராஃப்ட்டுலையே திருடுரானுகளே

! சிவகுமார் ! said...

@ ரமேஷ்

//அடபாவி டிராஃப்ட்டுலையே திருடுரானுகளே//

புரியல?

! சிவகுமார் ! said...

@ சண்முகம், மதுரை சரவணன்

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பர்களே!

கோகுல் said...

என்னது மக்கள் இயக்கமா!அப்பா காங்கிரஸ் கட்சிய டாகுடர் இயக்கத்தோட சங்கமிக்க போறாங்களா?

கோகுல் said...

நல்லெண்ண அடிப்படையில் இரவிலும் ஒரு மணி நேர (விலையில்லா) மின்வெட்டை அமுல்படுத்தி உள்ளனராம்.//
நல்லவேளைங்க!பாண்டியில அப்படி எந்த முடிவும் இன்னும் எடுக்கல!
தேங்க்ஸ் டூ என்.ஆர்.

கோகுல் said...

நானும் பட்டாச தீண்டி பல நாளாகுது ஆனா நீங்க ஒரு விளக்கம் கொடுத்தீங்க பாருங்க!\\
ஒரு தீக்குச்சியோ அல்லது ஊதுவத்தியோ பட்டாசை தீண்டலாம். அச்செயலை எரிமலை செய்தல் நியாயமல்லவே?\\

டமால்!டுமீல்!டப டப்!டுப் டுப்!
பல பட்டாசுகள் இதயத்தில் !

Philosophy Prabhakaran said...

ஜார்ஜ் க்லூனியை அந்த கேரக்டரில் நினைத்துப் பார்த்தாலே சூப்பராக இருக்கிறது... படத்தைப் பற்றி பதிவு போடவும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ ரமேஷ்

//அடபாவி டிராஃப்ட்டுலையே திருடுரானுகளே//

புரியல?///

இதை பத்தி இன்னிக்கு நான் எழுதலாம்ன்னு இருந்தேன். நீங்க எழுதிட்டேங்களே. அத சொன்னேன் ஹிஹி

Chitra said...

Happy Deepavali!

Raja said...

செலின் குமார் நகைச்சுவை / குணச்சித்திரம் இரண்டிலும் தனித்தன்மை மிக்கவர். அவரது நகைச்சுவை நடிப்பிற்கு "கல்யாணராமன்" , "கிரேஸி கோபாலன்" படங்களையும் மிகச்சிறந்த நடிப்பிற்கு "அச்சன் உறங்காத வீடு" திரைப்படத்தினையும் உதாரணமாக சொல்லலாம்.

FOOD said...

அறுசுவை.

Related Posts Plugin for WordPress, Blogger...