செ.பு.க. அரங்க நுழைவாயில்: நல்லி சின்னசாமி செட்டி உங்களை வரவேற்கிறார் வரவேற்கிறது என்று ஒரு விளம்பரம். புவர் தமிழ்!
சனிக்கிழமை காலை 11 மணிக்கு கண்காட்சி துவங்கியதுமே டாண் என அங்கு ஆஜர் ஆனார் தம்பி பிரபாகரன். நான் அவரை விட சீக்கிரமாக மாலை 3 மணிக்கே செல்ல முடிவு செய்தேன். பச்சையப்பன் கல்லூரியை நோக்கி பறந்தது 47A பேருந்து. 'நிறுத்தம் வந்ததும் சொல்லுங்கள்' என்று எனதருகே அமர்ந்து இருந்த பெரியவர் சொன்னார். பெயர் சந்திரசேகர்.செ.பு.க. நடக்கையில் மட்டும் பரபரப்பு மிகுந்த சென்னைக்குள் வர வேண்டி இருப்பதாகவும், மற்றபடி தாம்பரத்தில் அமைதியான சூழலில் வாழ்வதே பிடித்திருப்பதாகவும் கூறினார். சில சமயங்களில் புத்தங்களை கடைசி பக்கத்தில் இருந்து முதல் பக்கம் படிக்கும் பயிற்சியை மாணவர்கள் முயற்சி செய்து பார்த்தால் மனதில் நன்றாக பதியும் என புதிதாக ஒரு யோசனையை சொன்னார். சிறிது நேரத்தில் செ.பு.க. நடக்கும் ஆங்கிலோ-இண்டியன் பள்ளியை அடைந்ததும் அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு புத்தங்களை மேய அரங்கிற்குள் நுழைந்தேன்.
பிளாஸ்டிக் கவருக்கு தடை போட்டுவிட்டனர் என்பதால் பதிவர்கள் சிலர் படையப்பா ரஜினிபோல பேக்கை மாட்டிக்கொண்டு வலம் வந்தனர். அங்கு நானும், தம்பி பிரபாகரனும் சந்தித்து உரையாடிய பதிவர்கள்: 'கேப்பிடலிஸ்ட்' கே.ஆர்.பி., ஓ.ஆர்.பி.ராஜா, மோகன் குமார், கேபிள் சங்கர நாராயணர், உண்மைத்தமிழன்,மணிஜி,நேசமித்ரன்,சுரேகா, ஆரூர்.முனா.செந்தில், கீதப்ரியன், தம்பி மேவி, பஸ்ஸர்கள் க.ரா, கார்த்திகை பாண்டியன், ரோமியோ உள்ளிட்ட இன்னும் சிலர்.
பதிவர்கள் நிறைய நேரம் முகாமிட்ட இடம் டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால். அதன் முதலாளி வேடியப்பன் அவர்களை சந்தித்ததும் மகிழ்ச்சி. கண்காட்சி வாசலில் அழகுக்குறிப்பு பேனரை வைத்திருந்தார் வேடியப்பன். ரைட்டு!!
இந்நன்னூல் வலைத்தளம் மூலம் புத்தக விற்பனை செய்பவர்கள் வித்யாசமான ஸ்டாலை வைத்திருந்தார். தவறாக www.nannool.com என எழுதி இருந்தனர். அதை கிளிக் செய்தால் வேறொரு தளத்திற்கு செல்கிறது. www.nannool.in தான் சரியான URL. சரி செய்ங்க பாஸ். புத்தங்களை இலவச டெலிவரி செய்வதாக சொன்னார் அதன் உரிமையாளர். நிகழ்ச்சி நிரலை வைத்திருந்த பேனரை படம் பிடித்துள்ளேன்.பிரபலங்களின் மேடைப்பேச்சுகளை கண்காட்சி நடக்குமிடத்தில் கேட்க, கீழிருக்கும் படத்தை கிளிக் செய்து பார்க்க.
முதல் சுற்றில் சில புத்தகங்களை மட்டுமே வாங்கினேன். அவை பின்வருமாறு:
ஈழத்தில் சாதியம். இருப்பும் தகர்ப்பும், தொகுப்பாசிரியர் மகாராசன்.
வெளியீடு: கருப்பு பிரதிகள். விலை ரூ. 75.
ஸ்டால் பெயர்: கருப்புப்பிரதிகள்.
புதுமைப்பித்தன் கதைகள், பதிப்பாசிரியர் வீ. அரசு.
வெளியீடு: அடையாளம். விலை: ரூ. 350
ஸ்டால் பெயர்/எண்: பரிசல் புத்தக நிலையம். 123.
ஒரு புளியமரத்தின் கதை. எழுத்து: சுந்தர ராமசாமி.
வெளியீடு: காலச்சுவடு. விலை: ரூ. 150.
ஸ்டால் பெயர்/எண்: எதிர் வெளியீடு. 221.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
தமிழில்: இரா. முருகவேல். விலை: ரூ. 150.
ஸ்டால் பெயர்/எண்: சிவிக்குயில் புத்தக பயணம். 277.
வரும் சனியன்றுதான் காலை 11 முதல் இரவு 9 வரை முழுநேர புத்தக வேட்டை தொடர உள்ளது. அப்போது மேலும் பல தகவல்களை தங்களுக்கு பகிர்கிறேன்.
..............................
Photos:
agsivakumar.com
..............................
சென்னை புத்தக கண்கொள்ளா காட்சி - 2012
சென்னை புத்தகக்கண்காட்சியில் நான் - 2011
.............................................................





9 comments:
வித்தியாசமான பேனர் (நன்னூல்)
ஆயிரம்தேன் இருந்தாலும் எங்க ஏரியா மாதிரி(பல்லாவரம் தாம்பரம் :-) வருமா? ஹி...ஹி...ஹி...
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.
கலக்குங்க பாஸ், எனக்கு கண்காட்சி என்றால் ரொம்ப இஸ்டம்.
@ ஆமினா
வராது மேடம்.
@ ரத்னவேல்
நன்றி ஐயா
@ KANA VARO
நீங்களும் ஒரு தரம் சென்னை வாங்க நண்பரே!!
நல்ல பகிர்வு. அடுத்த விஸிட்டில் எவனெல்லாம் மாட்டப்போறானோ!
நல்ல வேளை, முதல் பேனரில், அவர் பட்மும் இல்லைன்னு சொல்லாம விட்டீங்களே! கழுகுப் பார்வை.
இன்று தான் புத்தக கண்காட்சி சென்று வந்தேன். நிறைய ஸ்டால்கள் இம்முறை.
நானும் சனிக்கிழமை செல்லலாம் என்றிருக்கிறேன் :)
Post a Comment