DEFEAT THE DEFEAT BEFORE THE DEFEAT DEFEATS YOU

Tuesday, January 31, 2012

Agneepath 1990


                                                                                      
அக்னிபத் 2012 விமர்சனத்தில் சொன்னது போல அமிதாப் நடித்த அக்னிபத் 1990 திரைப்படத்தை யூ ட்யூபில் பார்த்தேன். முதல் நாளிலேயே 25 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது அக்னிபத் 2012. ஆனால் அமிதாப் நடித்த அக்னிபத் அப்போது படுதோல்வி அடைந்த படம். ஆனால் 1990 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அமிதாப்பும், சிறந்த துணை நடிகர், நடிகைக்கான பிலிம் பேர் விருதுகளை மிதுன் சக்ரபர்த்தி மற்றும் ரோஹினியும்(அமிதாப் அம்மாவாக வருபவர்) வாங்கி உள்ளனர்.

                                                                                                     
மாண்ட்வா எனும் ஊரில் வாத்யாராக இருக்கிறார் அமிதாப்பின் தந்தை. அங்கு சாராயம், பெண்களை வைத்து தவறான தொழில் செய்கிறான் காஞ்ச்சா (டான்னி டென்சோங்பா(எந்திரன் வில்லன்)). அவ்வூரில் ஒரு ஆளை அமர்த்தி வெளிநாட்டில் இருந்து கட்டளைகள் பிறப்பிப்பது டானியின் வேலை. இந்த அநியாயத்தை தட்டிக்கேட்கும் வாத்யார் மீது பழி சுமத்தி ஊராரை வைத்தே அடித்து கொள்கிறார் வில்லன். ஊரைவிட்டு தாய், தங்கையுடன் மும்பைக்கு வருகிறான் சிறுவன் விஜய்(அமிதாப்).  மும்பையில் டான் ஆக உருவெடுத்து  பிறந்த மண்ணை காஞ்ச்சாவிடம் இருந்து எப்படி விஜய் மீட்கிறான் என்பதுதான் மீதிக்கதை.  

அம்சமாய் பொருந்தும் கரகர குரலுடன் படம் முழுக்க நடித்து உள்ளார் அமிதாப்.   ஊரில் நடக்கும் அக்ரமங்களை பார்த்து கோபப்படுபவராக டின்னு ஆனந்த், அமிதாப் தந்தையாக ஆலோக் நாத், மும்பை வில்லனாக சரத் சக்சேனா என சிறந்த நடிகர்கள் இருப்பது படத்தின் பலம். கொஞ்சமும் அலட்டாமல் அதே சமயம் கவனிக்க வைக்கும் வில்லனாக டான்னி டென்சோங்பா. நம்மூர் ரகுவரன் போல.  அமிதாப்பின் மனைவியாக மாதவி..சில காட்சிகள் மட்டும் வருகிறார். இவருக்கு டூயட் இல்லை. காதல் வழியும் காட்சிகள் இல்லை. அந்த குறையை மிதுன் சக்ரபர்த்தி நீக்குகிறார் அமிதாப்பின் தங்கையை காதலிப்பதன் மூலம். 

                                                 மிதுன் சக்ரபர்த்தி....அசத்தல் நடிப்பு 

மும்பையில் இருக்கும் தமிழனாக கிருஷ்ணன் அய்யர் எம்.ஏ. எனும் பெயருடன் வலம் வருகிறார் மிதுன். இளநீர் வியாபாரியான இவர் அமிதாப்பை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றி பிறகு அவருடைய வலது கையாக மாறுகிறார். தமிழ் கலந்த ஹிந்தி பேசி சீனுக்கு சீன் சிக்சர் அடிக்கிறார். பிலிம்பேர் விருதை அவருக்கு தந்தது முற்றிலும் சரிதான். நம்ம ஆனந்த் பாபு போல அங்கு டிஸ்கோவில் கலக்கிய இவர் இப்படத்தில் டிஸ்கோ தவிர்த்து லோக்கல் டான்ஸ் ஒன்றை ஆடுகிறார். மிதுனின் கெரியரில் பெயர் சொல்லும் படமாக அக்னிபத் என்றும் இருக்கும். 

புதிய அக்னிபத்தில் ஹ்ரித்திக் க்ளைமாக்ஸ் காட்சியில் சஞ்சய் தத்தை கிராபிக்ஸ் உதவியுடன் தூக்கி வீசுகிறார். ஆனால் இதில் மிதுன் மிஷின் கன்னுடன் எதிரிகளை டுமீல் டுமீல் என சரமாரியாக சுட்டு அமிதாப்பை விட அதிகமாக ஹீரோயிசம் செய்கிறார். குட்டி அமிதாப்பாக வரும் மாஸ்டர் மஞ்சுநாத் சுறுசுறு முகத்துடன் பின்னுகிறான். குறிப்பாக காவல் நிலையத்தில் பேசும் வசனம். வாட் எ வாண்டு.   

                                                        டான்னி டென்சோங்பா  

சஞ்சய் தத்தின் மிரட்டல் உருவம், அருமையான ஒளிப்பதிவு, கிராபிக்ஸ்..இது மட்டுமே பழைய அக்னிபத்தை விட தற்போது வந்துள்ள அக்னிபத் 2012 படத்தின் ப்ளஸ். மற்றபடி நாயகன்,துணை நடிகர்கள் நடிப்பு, தொய்வில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள், பாடல்கள் என சகலத்திலும் அக்னிபத் 1990 தான் மனதில் நிற்கிறது. ஹாட்ஸ் ஆப் அமிதாப்..சிங்கம்லே!! கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஓடும் இப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை விடாமல் பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் முகுல் ஆனந்த். இது எப்படி தோல்விப்படமாக அமைந்தது என ஆச்சர்யப்பட வைக்கிறது. 

அமிதாப், ரஜினி போன்ற மாஸ் ஹீரோக்களின் ரீமேக்கில் நடித்து அதற்கு சமமாக பெயர் வாங்கும் ஆசை இக்கால நாயகர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஆனால் சிங்கிள் சிங்கமாக ஸ்க்ரீனை ஆக்ரமிக்க சிக்ஸ் பேக்சும், சில ஜிகினா வேலைப்பாடுகளும் மட்டும் இருந்தால் பத்தாதே. புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்வது போல் உள்ளது தற்போதைய ஹீரோக்களின் இந்த சேட்டைகள். 

                                                                       
உலக சினிமாக்களை சுட்டு எடுக்கும் இந்தியப்படங்களை பார்க்கையில் ஒரிஜினல் படத்தை பார்க்கும் ஆர்வம் நமக்கு எழும். உதாரணம்: நந்தலாலா (கிகுஜிரோ). அதுபோன்ற வாய்ப்பை பழைய கிளாசிக் சினிமாக்களை ரீமேக்கி வெளியாகும் புதிய காவியங்கள் நமக்கு தருகின்றன. அப்படி ஒரு வாய்ப்பை தந்த அக்னிபத் 2012 அணிக்கு எனது நன்றி. பா, ஆரக்சன், மொஹப்பத்தேன் போன்ற தற்கால அமிதாப் படங்களை மட்டுமே பார்த்த எனக்கு, மாஸ் ஹீரோவாக அவருடைய நடிப்பை முதல் முறை பார்க்கும் வாய்ப்பு அக்னிபத் மூலம் கிட்டியது. சூப்பர் அமிதாப் ஜி!! 

வியக்க வைக்கும் கதையம்சம், தொழில்நுட்ப ஜாலங்கள் எதுவும் இல்லாவிடினும் ஹீரோயிசம், மும்பை கேங், பழிவாங்கல், சென்டிமென்ட் என சராசரி சினிமா ரசிகனுக்கு தேவையான அம்சங்களுடன் எடுக்கப்பட்டிருக்கும் அக்னிபத் கண்டிப்பாக் க்ளாசிக்தான்.


அமிதாப்பின் அக்னிபத் 1990 - கிங் ஆப் இண்டியன் மசாலா!!
................................................................................................


யூ ட்யூப்பில் பார்க்க க்ளிக் செய்க: 


..........................................................................................


....................................

My other site:
......................................

..........................................................

சமீபத்தில் எழுதியது: 

.........................................................



                                                                   

2 comments:

vijai said...

This movie is also remake in tamil in the name of sivasakthi.sathya raj did the amitabh role

sarav said...

what u missed amitabh's style and dialogue delivery ? See the original don where he says the punch dialogue -evarthan punch dialogue ku appa Don ko pakadna mushkil nahi..... Na mumkin hai Comedy acting ku chupke chupke padam parungal Dharmendra kalaki iruppar kooda amitabh kalakuvar appadiye Rajini naditha pala padangal Amitabh padathoda remake than athai ellam parungal

Related Posts Plugin for WordPress, Blogger...