மாண்ட்வான்னு ஒரு ஊர்ல ஒரு கெட்டவன். அவன் செய்ற தப்பை தட்டி கேட்கிறார் ஒரு வாத்தியார். அவர் மீது அநியாயமாக பழிசுமத்தி கொள்கிறான் கெட்டவன். வாத்தியார் பிள்ளை இதை கண்டு கொதிக்கிறான். தாயுடன் மும்பைக்கு செல்கிறான். 15 சால் கே பாத்..அதாவது 15 வருடத்திற்கு பிறகு அவன் வளர்கிறான்(வளந்துதான ஆவணும்). அவன்தான் ஹ்ரித்திக் ரோஷன்(Fast Forward நவீனத்துவம் ஹை..). அங்கிருக்கும் பாய்(ரிஷி கபூர்) ஒருவரிடம் அடியாளாக சேர்கிறான். இவனுக்கு தரப்படும் முக்கியத்துவம் கண்டு பாயின் மகன் டென்ஷன் ஆகிறான். பாய் மறைவுக்கு பின் 'டான்' பொறுப்பை ஏற்கிறான் ஹ்ரித்திக். மாண்ட்வா செல்கிறான். சஞ்சய் தத்தை பழிவாங்க(அடே அடடே ஆச்சர்யக்குறி!!!).
இப்படி ஒரு அரதப்பழசான கதை என்று தெரிந்தும் நான் தியேட்டருக்கு சென்ற காரணம் என்ன? சொல்றேன். சுனோ ஜீ(கேளுங்க சார் ஐயா).
ரத்தம் தெறிக்கும்,பழிவாங்கும் படங்களை கண்டாலே பெரும்பாலும் எகிறி ஓடி விடுவேன். (உதா..ரணம் ரத்த சரித்திரம்). ஆனால் இந்த (சிகப்பு) கலரில் படம் பார்த்து பல நாட்கள் ஆனதால் டிக்கட் ரிசர்வ்ட். லாஜிக் பற்றியெல்லாம் எந்தக்கவலையும் படாமல். ராஜபாட்டை, மேதை போன்ற நெருப்பு நிரம்பிய நெடுஞ்சாலையில் நடைபோட்டவர்களுக்கு இந்த அக்னிபத்(தீப்பாதை) எல்லாம் ஒன்றுமே இல்லை. சஞ்சய் தத்தின் கெட்டப்பிற்காகவே அக்னிபத்தை பார்த்தே தீர வேண்டும் என எண்ணினேன்(டிசைட் கர்லியா மே நே). மிரட்டி எடுக்கும் உருவம், வெறிகொண்ட கண்கள், இடது காதுக்கு மேல் தொங்கும் கம்மல் என சஞ்சய்...சூப்பர்ப்!!

முதல் பாதியில் தூங்கி எழுந்த முகத்துடனே ஹ்ரித்திக் நடமாடுகிறார். அதுதான் அக்னிபத்தின் பலவீனம். மும்பை தாதாவாக பழம்பெரும் ஹீரோ ரிஷிகபூர். ஆவரேஜ் பெர்பாமன்ஸ். வேறொரு டெர்ரர் வில்லனை போட்டு இருந்தால் அக்னி இன்றும் நன்றாக பற்றி இருக்கும். பிரியங்கா சோப்ரா இந்திய நாயகிகள் செய்யும் வேலைகளை(ஹீரோவை லவ் பண்ணு, (நீ) பாட்டுக்கு ஆடு) கனகச்சிதமாக செய்துவிட்டு செல்கிறார். போலீஸ் அதிகாரியாக ஓம் பூரி. பெரிதாக நடிக்க இந்தக்கதையில் ஸ்கோப் இல்லை.
இரண்டாம் பாதியில்தான் படம் தீயாய் பரவுகிறது. தாய், தங்கையை சந்தித்து உணவு சாப்பிடுகையில் ஹ்ரித்திக் நன்றாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். ஆரம்பம் முதலே சஞ்சய் தத் - ஹ்ரித்திக் காட்சிகளை நிறைய வைத்து இருந்தால் அக்னிபத் சிறப்பாக பேசப்பட்டிருக்கும். சஞ்சய்யின் கெட்டப்பிற்கு எடுக்கப்பட்ட சிரத்தையை அவருக்கு மேலும் சில காட்சிகளை வைத்து விறுவிறுப்பை கூட்டும் வாய்ப்பை தவற விட்டு விட்டார் இயக்குனர் என்பது என் கருத்து. ரத்தம், துப்பாக்கி, விநாயகர் சதுர்த்தி என முழுக்க முழுக்க அடர்த்தியான வர்ண ஜாலத்தை காட்டி உள்ளார் DoP(ஒளிப்பதிவாளரை இப்படித்தான் இப்பல்லாம் கூப்புடறாங்க. இஸ்கா அர்த் ஏ ஹை(இதன் அர்த்தம் இதுதான்) - Director of Photography).
(நம்ம,காத்ரீனா) குடுத்த காசுக்கு செமையாக ஒரு அல்டிமேட் லோக்கல் குத்தாட்டம் போட்டுள்ளார் எனது பேரபிமான பேரழகி(பொதுவாக நாயகிகள் பற்றி சிலாகித்து விமர்சனம் எழுதியதில்லை. வெகு சிலர் மட்டும் விதிவிலக்கு) க்யா டான்ஸ்ரே பகவான்(என்னா ஆட்டமடா சாமி). 150 கி.மீ. வேகத்தில் 90, 180 டிகிரி ஆங்கிள்களில் இடுப்பை இந்த வள வளைக்குது இந்தப்பொண்ணு!! 'சிக்னி சமேலி' அப்டிங்கற இந்தப்பாட்டுதான் இப்ப இந்தி(ய) இளைஞர்களின் தூக்கத்தை கலைத்து கொண்டு இருக்கிறது.
பெரிதாக சொல்லிக்கொள்ள எந்த புதிய சீன்களும் இல்லை. அமிதாப் நடித்த அக்னிபத்தை பார்த்தவர்கள் இதைப்பற்றி மேலும் சரியாக சொல்லக்கூடும். அதுதான் பொருத்தமும் கூட. பழைய அக்னிபத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் விமர்சனம் போடுகிறேன். எனக்கென்னவோ அமிதாப் மாதிரி மெகா மாஸ் ஹீரோக்களுக்குதான் இவ்வகை சினிமாக்கள் சரிப்பட்டு வரும். மக்களும் ஏற்பார்கள் எனத்தோன்றுகிறது. ஹ்ரித்திக் இடத்தில் சூர்யா நடித்து இருந்தால் கண்களால் தீயை கொளுத்தி இருப்பார். கண்களுக்கு கீழ் சற்று தடித்த தசைப்பகுதிகள், அதிலிருந்து வரும் சோம்பலான உணர்ச்சிகள்தான் ஹ்ரித்திக்கின் மைனஸ்.
'முதல் வார ஓப்பனிங்கே அட்டகாசம், க்யா மசாலா பிலிம் ஹை யார்' என்று வடக்கில் பில்ட் அப் தருகிறார்கள். இதையே நம்மூர் ஹீரோக்கள் நடித்து இருந்தால்(ரஜினியே ஆனாலும்) முதல் நாளே ஊத்திக்கொண்டு இருக்கும். என்னமோ (ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்புடுற ஆசை இருந்தா..) போங்க!!
அக்னிபத் - தீயா வேலை செஞ்சி இருக்கலாம்!

.............................................................................................
பொது இடங்களில் இளம்பெண்கள் போகையில் உங்கள் தொப்பை தெரியாமல் இருக்க வயிற்றை இறுக்கிக்கொண்டு நடக்கும் வாலிப(வயோதிக!!) அன்பர்களே..காத்ரீனா ஆடுற ஆட்டத்தை பாத்து அப்படியே ஹர் ரோஜ் தீன் பார் பார்(டெய்லி மூணு தபா) ப்ராக்டிஸ் பண்ணுங்க. அடுத்த வாரம் நீங்கதான் தென்னகத்தின் ஹ்ரித்திக் ரோஷன் ஹை!! பிர் மிலேங்கே (அப்புறம் 'மீட்'டுவோம்). Bye பாய்(சகோதரரே)!!

.............................................................................
................................
My other site:
..............................

10 comments:
நல்லா காமெடியா எழுதி இருக்கேங்க.....
ஹிந்தி மே பீ குச் குச் டைரக்டர் ஹமாரா ஹரி ஜெயசா ஹை.... (அங்க கூட நம்ப ஹரி மாதிரி டைரக்டர் இருக்கார் போல...)
அங்க தாபங்க, சிங்கம் மாதிரி படங்கள் ஹிட் ஆனது தான் தீஜுவாலைக்கு காரனம்...
ஷீலா கி ஜவானி பார்த்துட்டே மெர்சலாகி கிடக்குறோம்... இதுல புதுசா இன்னொன்னு வேறயா...
காத்ரீனாஆஆஆஆஆஆஆஆ
//அக்னிபத்(தீப்பாதை)//
நா நிறைய இடத்தில் அக்னிபாத் என பரப்பிட்டேனே... அதுவும் ரித்தீக் தீகுளிக்க போறாராம் என தலைப்பு போட்டு ஹீ...ஹீ...ஹீ... (அக்னி-தீ, பாத்-குளிப்பு... அரைகுறையா ஹிந்தி கத்துவச்சுக்க்கிட்டு இவ பண்ற அலப்பறை தாங்க முடியலன்னு கத்த போறாய்ங்க என்னை :-)
எம்புட்டு படம்யா பாக்குறீங்க நறநற
@ ராஜ்
சரியா சொன்னீங்க ராஜ். பேரரசு, ஹரி ஹிந்தி படம் டைரக்ட் பண்ணனும். அதை நாம சீக்கிரம் பாக்கணும் :)
@ பிலாசபி
இது டாப்பு டக்கருப்பா!!
@ நா. மணிவண்ணன்
மதுரைக்கு வந்தா காத்ரீனாவை விட மாட்டீங்க போல.
@ ஆமினா
அமிதாப்பின் அக்னிபத் 1990 விமர்சனம் போட்டுருக்கேன். அந்த படம் பாருங்க. நல்லாருக்கு.
//மோகன் குமார் said...
எம்புட்டு படம்யா பாக்குறீங்க நறநற//
என்ன சார் செய்ய..இன்னொரு முதல்வரை உருவாக்க (சோ மாதிரி) கிங் மேக்கர் ஆகணும்னு ஆசை வந்துருச்சி...
Post a Comment