மேதகு பூரி ஜகன்னாத்லு,
நமஸ்காரமண்டி. எலா உண்டாரு? (எப்படி இருக்கீங்க) பொங்கலுக்கு ஒச்சின மீ சித்திரம்(உங்கள் படம்) பிசினெஸ்மேன் சூசானு(பார்த்தேன்). அதி குறிச்சி மீ தக்கிற மாட்லாடால அனி ஆசகா உந்தி(அது குறித்து உங்களிடம் பேச ஆசை). இதிகோ(இதோ) நா(என்) மனக்குமுறலு. மேதையின் வசூலை மிஞ்ச இப்படி ஒரு அஸ்திரத்தை அக்கட உண்டி(அங்கிருந்து)ஏவுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அடிக்கடி என் நண்பர்கள் 'தெலுங்குல மகேஷ் பாபு பின்றாய்யா" என்று சொல்வதுண்டு. ஆனால் அவர் படம் ஒன்றைக்கூட பார்த்ததில்லை. அஜித்தின் ஒண்ணுவிட்ட தம்பி போல இருப்பார், இவருடைய தமிழக கிளைத்தலைவர் விஜய் என்று மட்டும் தெரியும். எனவே இந்த முறை மகேஷ் தரிசனம் தொரகால(வேண்டும்) என்று முடிவு சேசி (செய்து) தியேட்டர் வெல்லானு(சென்றேன்).
எந்த்த(எவ்ளோ) தகிறியமுலு
டைட்டிலில் 'இப்படம் மும்பையில் எடுக்கப்பட்டாலும் உங்களுக்கு(ஆந்திரா மக்களுக்கு) புரிய வேண்டும் என்பதால் கேரக்டர்கள் தெலுங்கு பேசுவது போல் எடுத்துள்ளோம்' என்று செப்பினாறு(சொன்னீங்க). ஆனா தெலுங்கு, ஹிந்தி ரெண்டும் கலந்து பேசுறாங்க. ஹிந்தி ரீமேக் பண்ணாம 2-in-1 பேக்கேஜா? மேதையை மிஞ்சி விட்டது பூரிகாரு. என்னை ஆச்சர்யக்கடலில் மூழ்க வைத்து திக்கு தெரியாமல் திக்குமுக்காட வைத்த உங்கள் மேக்கிங்குலு.. எட்லண்டி இட்லா (எப்படிங்க இப்படி?). இதிகோ நாக்கு பட்டின மீ (இதோ எனக்கு பிடித்த உங்களது) இயக்குனர் டச்(சுலு):
* மும்பை தாராவியில் இருக்கும் ஏழை மக்களின் கடன்களை அடைக்க மகேஷ் (படப்பெயர் சூர்யா) களம் இறங்கியதுமே நான் என் சீட்டை தாண்டி எனக்கு முன்னிருக்கும் சீட்டின் நுனிக்கே வந்துவிட்டேன். ஆரம்பமே அசத்தல்.
* மும்பைக்கு இனி நான்தான் டான் எனக்கூறி சுண்டுவிரலை அடிக்கடி காட்டுகிறார் சூர்யா(பார்யா!!).இறுதிவரை முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு எம்மை பயமுறுத்துகிறார். இந்த தமன் வேறு 'ட ட டம்ம்..டாம்' என்று பில்ட் அப் இ(ம்)சை தந்து நம்மை பிளிற வைக்கிறார்.
* காஜல் அகர்வால்..(நாசரின் மகளாக) என்னத்த சொல்ல. அழுது கொண்டே சிரிப்பதும், சிரித்து கொண்டே அழுவதும். அடங்கப்பா. மகேஷ் நல்லவர் என்று தெரிந்ததும் ஐ லவ் யூ என்றும், கெட்டவர் என்றதும் ஐ ஹேட் யூ என்றும் மாறி மாறி சொல்லி..ஸ்ஸ்ஸ். பூரி சார். ப்ரம்மாதமண்டி. தோழியாக வரும் பெண் மகா அறுவை.
* படுமொக்கையான ஜோக்கு(???)களுக்கு கூட தியேட்டரில் அவ்வப்போது ரசிகர்கள் சிரித்தனர். நகைச்சுவையில் தெலுங்கு சினிமா மிகவும் பின் தங்கி உள்ளதை இது உறுதி செய்கிறது. பாவம் ஆந்திர மக்கள். தமிழ்ப்பட நகைச்சுவை நடிகர்கள் எவ்வளவோ மேல். இந்த டிபார்ட்மெண்டில் ஆந்திரா படவுலகம் கணிசமான வளர்ச்சியை பெற வேண்டும். பாத்துக்கங்க பூரி.
* படுமொக்கையான ஜோக்கு(???)களுக்கு கூட தியேட்டரில் அவ்வப்போது ரசிகர்கள் சிரித்தனர். நகைச்சுவையில் தெலுங்கு சினிமா மிகவும் பின் தங்கி உள்ளதை இது உறுதி செய்கிறது. பாவம் ஆந்திர மக்கள். தமிழ்ப்பட நகைச்சுவை நடிகர்கள் எவ்வளவோ மேல். இந்த டிபார்ட்மெண்டில் ஆந்திரா படவுலகம் கணிசமான வளர்ச்சியை பெற வேண்டும். பாத்துக்கங்க பூரி.
* உருப்படியாக வேலை செய்யாத ஹீரோ, கமிஷனர்(நாசர்) பொண்ணை காதலிப்பது..அடுத்த வாட்டி இந்த மாதிரி சீன் டிஸ்கஷன் நடந்தா கூப்புடுங்க பூரி. கண்டிப்பா வர்ர்ர்ர்றேன்.
* விறுவிறுப்பான சீன்(!!!) வரும்போதெல்லாம் பின்னணியில் கோரசாக கத்தி கத்தி பயமுறுத்தும் கலைஞர்களுக்கு மகேஷின் தமிழக ரசிகர்கள் சார்பாக 50000 ரூபாய் கூரியர் செய்யப்பட்டுள்ளது. தந்து விடவும்.
* ஷாயாஜி ஷிண்டேவின் கட்சி வேட்பாளர்கள் இந்தியா முழுக்க தேர்தலில் நிற்க ஆகும் மொத்த செலவையும் நானே ஏற்கிறேன் என்று மகேஷ் சொல்லும்போது "இதெல்லாம் நடக்குற கதையா?" என்று ஒரு அடிப்பொடி கேட்க அதற்கு மகேஷ் "டெல்லி, கொச்சி, சென்னை, கொல்லம், ராஞ்சி, கல்கத்தா, புனே, ராஜ்கோட், இந்தோர்....என்று போடுவாரே ஒரு லிஸ்ட்டு. அடடே அருமை. அற்புதம் கலந்த பெருமை.
"4 - வது ஷோல 4 பேராவது இருப்பாங்க பூரி. டோன்ட் வொர்ரி"
* க்ளைமாக்ஸ் லொக்கேஷன் ஒரு பாழடஞ்ச கட்டடம். செம இன்னோவேடிவ் ப்ரெயின். உங்கள அசச்சிக்க முடியாது. அசச்சிக்க முடியாது பூரிகாரு. காஜல் கழுத்துல கத்தி. மகேஷ் கைல டுப்பாக்கி. எதிர்ல பிரகாஷ்ராஜ். மகேஷ் என்ன பேசப்போறார்னு தியேட்டர்ல இருந்த எல்லாரும் ஆர்வம் தாங்காம ஸ்க்ரீனுக்கு கீழ இருக்குற இடத்துக்கே போயி கும்பலா உக்காந்துட்டோம். ஆனா நாங்க யாருமே எதிர்பார்க்காத வசனத்தை மகேஷ் பிரகாஷ்ராஜை பாத்து பேசறாப்ல வச்சீங்க பாருங்க. அமேசிங் பூரி சார். அந்த வசனம்...
"அவள விட்டுடு."...
அடுத்து ஒண்ணு சொன்னாரு பாருங்க மகேஷு. அதைக்கேட்டு ஆனந்த கண்ணீர்ல என் சட்டை பாக்கெட் மட்டும் நிரம்பி வழியல. கார்கோஸ் பேண்ட்ல இருந்த ஆறு பாக்கெட்டும் ரொம்பத்தான் ரொம்பிருச்சி போங்க..
"இந்தா டுப்பாக்கி. நீயே என்னை கொன்னுடு. இல்ல நானே சுட்டுக்கிட்டு சூசைட் பண்ணிக்கறேன்". படம் ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷத்ல நாங்க சொல்ல நெனச்ச டயலாக்கை கடைசில மகேஷ் சொல்லிட்டாரு. பெத்த மகிழ்ச்சி. காஷ்மீர் பக்கம் மகேஷை சீக்கிரம் அனுப்பி வைங்க சார். கேப்டன் படம் வராம தீவிரவாதி பயலுகளுக்கு காஷ்மீர் குளிர்லயும் குளிர் விட்டுப்போச்சாம்.
அடுத்த சித்திரம்லோ(படத்தில்) மீட் சேஸ்தாம்(செய்யலாம்) பூரி அண்ணய்யா.
பிசினெஸ்மேன் - மகேஷின் சோலோ பூரி!
......................................................................................
அடுத்த சித்திரம்லோ(படத்தில்) மீட் சேஸ்தாம்(செய்யலாம்) பூரி அண்ணய்யா.
பிசினெஸ்மேன் - மகேஷின் சோலோ பூரி!
......................................................................................
சுண்டுவிரலை நீட்டி மகேஷ் பேசும் வசனமும், பின்னணியில் கோரசாக கூவி கொல்லும் குரல்களும்.. உங்களுக்காக பிரத்யேகமாக. இப்படி ஒரு ட்ரெயிலரை பாக்க என்ன புண்ணியம் செஞ்சீங்களோ...!!!
எச்சரிக்கை:
இதய பலகீனம் உள்ளவர்கள் இக்காணொளியை தவிர்க்கவும். :))
எச்சரிக்கை:
இதய பலகீனம் உள்ளவர்கள் இக்காணொளியை தவிர்க்கவும். :))
.....................................................................................
.................................
My other site:
.................................
......................................................
சமீபத்தில் எழுதியது:
.....................................................



8 comments:
தெலுங்குல மாட்லாடி விமர்சனத்த செப்பி உண்டீரு....
ஏமண்டி ஏஞ்செஸ்த்துனாரு....?
அட்ட்லானாவா .மீக்கு டேஸ்ட்டே லேதுயா ,கேபிள் அண்ணையா ஒக்க மனச்சக பில்ம்முன்னு செப்பேடு
என்னய்யா இது எல்லாரும் இப்படி கெளம்பிட்டீங்க. ஸ்டாப் செய்யண்டி!!
அதி எலாக சிவா. மெட்ராஸ் பவன்லோ, நண்பேன்டாவுலோ, மல்லி கவுண்டமணி செந்தில்லோ மீ நக்கலு கொஞ்சம் கூட தக்கலேதண்டி. சூஸ்கோண்டி, மீ கலாய்ப்பு அலாக அலாகே ஆ கேரக்டருக்கு தக்குவாக்காமோ பைக்க போய்க்கினே உந்தி. எவராயின மீ இண்டி சுமோ பம்பிஸ்தே மீக்கு சால ப்ராப்பளம் ஆகிபோவுண்டி.
வயிறு வலிச்சுடுசுங்க.நல்லா எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்.
எட்லண்டி இட்லா, எழுத முடியுது? ஹா, ஹா, ஹா, ஹா,....
"அன்பு நண்பரே உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி
Post a Comment