DEFEAT THE DEFEAT BEFORE THE DEFEAT DEFEATS YOU

Monday, January 30, 2012

Confident Casanovva




                                                                     
மலையாளத்தில் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிலிம். மோகன்லாலின் தயாரிப்பு. கேரளாவின் இயற்கை சூழலை ஒட்டிய இடங்களில் எடுக்கப்பட்ட படங்களையே எத்தனை நாள் பார்ப்பது? நமக்கும் லாலுக்கும் ஒரு மாற்றம் வேண்டாமா? அக்குறை கொஞ்சம் தீரும் வண்ணம் காதல், த்ரில் என மசாலா தூவிய படைப்பாக வந்துள்ளது கான்பிடன்ட் காசனோவா. யூனிவர்சல் ஸ்டார் மோகன் லால் என்று டைட்டில் போட்டதுமே முன்வரிசையில் இருந்தவர் 'லால் ஏட்டா' என்று உரக்க கத்தினார். 

துபாயில் பூக்கள் விற்பனை செய்யும் மெகா கோடீஸ்வரர்தான் காசனோவா(லால்). உபதொழிலாக காதலை ஊக்குவிப்பார். எனவே உலகம் முழுக்க இளம்பெண்களுக்கு இவர் என்றால் அப்படி ஒரு க்ரேஸ். சாகசம் மற்றும் பெரும் பணத்தை விரும்பும் நான்கு இளைஞர்கள் அடிக்கடி செய்யும் திருட்டால் இன்டர்போல் அவர்களை தேடி வருகிறது. அதன் முக்கிய அதிகாரி ரியாஸ் கான். அந்நால்வரை தனது பாணியில் பிடிக்க தனி வியூகம் வகுக்கிறார் லால். எனவே துபாயில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துகிறார். அதன் பெயர் Fall in Love. நான்கு இளைஞர்களில் இருவரை காதலில் விழவைக்கிறார்.இவரோ ஸ்ரேயா மீது ஹெவி வெயிட்டாக காதலில் விழுகிறார். கொஞ்சம் ரொமான்ஸ், கொஞ்சம் துரத்தல் என க்ளைமாக்ஸ் வரை மாறி மாறி வருகிறது.  

                                                                     
அறிமுகமே அட்டகாசம். இந்த உடம்பை வைத்துக்கொண்டும் காசுவலாக இளம் பெண்களுடன் ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டம் போடுகிறார் மோகன்லால். காதல் டிப்ஸ்களை இளைஞர்களுக்கு டி.வி. மூலம் சொல்கையில் அரங்கில் சிரிப்பொலி. பைக், கார்..ஏன் ஹெலிகாப்டரில் இருந்து கூட குதித்து அதகளம் செய்கிறார் மனிதர்(கொஞ்சம் கிராபிக்ஸ் உதவியோடு). ஒற்றை வீலில் பைக்கில் பறந்தவாறு மோகன்லால் பட்டையை கிளப்பும் காட்சிக்கு விசில் பறக்கிறது. நான்கு இளைஞர்கள் சரியான தேர்வு. துபாய் கட்டிடங்களில் தவ்வி தவ்வி கொள்ளை அடிக்கிறார்கள். நடிப்பும் ஓக்கே. 

இடைவேளை வரை விறுவிறுப்பாக செல்கிறது.ஆனால் அதற்குப்பின் ஸ்ரேயாவை லவ்வ லால் ஆரம்பிக்க தொடங்கி நம்மை கொட்டாவி விட வைக்கிறார். இந்த காட்சிகளை குறைத்து ரியாஸ் கான் புலனாய்வு, இளைஞர்களின் திட்டம், லாலின் நடிப்பு என கொண்டு சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். காற்று போன பலூன் ஆகிறது இரண்டாம் பாதி. க்ளைமாக்சில் பைக் சேஸ் காட்சியில் நிஜமாகவே அடிபட்டு மூன்று மாதம் மருத்துவமனையில் இருந்தாராம் லால். ரிச்சான துபாயை வளைத்து வளைத்து ஷூட் செய்துள்ளனர். 

                                                                      ரோமா

நீங்கதான் இஷ்டத்துக்கு மசாலா படம் பண்ணுவீங்களா? நாங்க மட்டும் இளைச்சவங்களா(!!!) என்று தமிழ் நாயகர்களுக்கு சவால் விட்டு இந்த வயதில் இவர் நடித்து இருப்பது ரசிக்கத்தான் வைக்கிறது. சல்சா டான்ஸ் ஆட பெருமுயற்சி எடுக்கிறார். ஆனால் தொப்பை ஸ்பீட் ப்ரேக் போடுகிறது. ஆன் மேரியாக வரும் ரோமா தக தகவென மின்னியதால் மற்ற குறைகள் பெரிதாக தெரியவில்லை. தியேட்டரில் இடைவேளைக்கு பிந்தைய காட்சிகளுக்கு பெரிதாக ரெஸ்பான்ஸ் இல்லாததால் படம் பப்படம் ஆக நிறைய வாய்ப்பு உள்ளதென தெரிகிறது. மோகன்லாலுக்காக ஒரு முறை பார்க்கலாம். லட்சுமிராய், ஸ்ரேயா, ரோமா ரசிகர்கள் இரண்டு முறை கூட பார்க்கலாம்.  


கான்பிடன்ட் காசனோவா - லால் மசாலா
.............................................................................................

....................................
My other site:
...................................


6 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சேட்டா.... ஆ பெண்குட்டியோட வல்லிய போட்டோ நிங்கள் போட்டில்லா....

தமிழ்வாசி பிரகாஷ் said...

பாதி படிக்கிற வரை தமிழுக்கு ரீமேக் பண்ண ஒரு படம் சிக்குச்சுன்னு நெனச்சேன். ஆனா மீதி படிச்சதுமே தமிழுக்கு ஒர்த்தான படம் இல்லைன்னு நெனச்சேன்.
ஏம்ப்பா நான் சொல்றது சர்தானே....

ஆரூர் மூனா செந்தில் said...

யய்யா ராசா, ஒரு மொழியையாவது விட்டு வைங்கப்பா, விட்டா ஒரியா படங்களுக்கும் விமர்சனங்கள் வரும் போல இருக்கிறதே. தாங்க முடியலை சாமீமீமீமீமீ....

! சிவகுமார் ! said...

@ பன்னிக்குட்டி

இவரு என்ன இப்படி ஆயிட்டாரு...உங்க முதல்வர் உம்மன் சாண்டி, பீடி மலபார், நடனம் கதக்களியோ..!!

! சிவகுமார் ! said...

@ தமிழ்வாசி

சர்தான் தலைவா

! சிவகுமார் ! said...

@ ஆரூர் முனா

உலக சினிமாவுல இந்திய படங்களும் அடக்கம்ல. அதான் பாரபட்சம் பாக்காம பாக்கறோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...