DEFEAT THE DEFEAT BEFORE THE DEFEAT DEFEATS YOU

Sunday, February 26, 2012

The Artist


                                                                 
இவ்வாரம் பிராட் பிட் நடித்த மனி பால், மர்லின் மன்றோ பற்றி எடுக்கப்பட்ட மை வீக் வித் மேரிலின் ஆகிய இரண்டில் ஒன்றை பார்க்கலாமா என்று யோசித்து கொண்டிருந்த வேளையில் ஆனந்த விகடனில் 'தி ஆர்டிஸ்ட்'  குறித்து இருபக்க செய்தி வெளியிட்டு இருந்தனர். நெட்டில் விவரங்களை தேடியபோது பாப்டா, கோல்டன் க்ளோப் விருதுகள் பலவற்றை இப்படம் வென்றிருந்தது தெரிய வந்தது. ஆஸ்கர் விருதுக்கான ரேசில் பத்து பிரிவுகளுக்கு நாமினேட் ஆகியுள்ளது. உடனே டிக்கட் ரிசர்வ் செய்து சனியன்று காலை வெளிநாட்டு 'கலைஞரை' (ஆர்டிஸ்ட்)  பார்த்தேன்.

1927 முதல் 1932 வரை சைலன்ட் பட நாயகனின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மௌனமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் மிசேல்.  கதை இதுதான். சைலன்ட் சினிமாக்களை கண்டு சலித்த மக்கள் டாக்கிங் மூவீஸ்களை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்த காலகட்டமது. எனவே இனி அம்மாதிரியான படைப்புகளையே எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என கிநோக்ராப் ஸ்டுடியோவின் முதலாளி சொல்லிவிட, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் சைலன்ட் பட சூப்பர் ஸ்டார் ஜார்ஜ் வாலெண்டின். ஆனால் அதை அலட்சியம் செய்துவிடுகிறார் தயாரிப்பாளர். அந்நேரத்தில் க்ரூப் டான்சர், துணை நடிகை என மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார் பெப்பி மில்லர். 

மில்லரையே  நாயகியாக அறிமுகப்படுத்தி தன் முதல் டாக்கிங் பிலிம் ஆக 'பியூட்டி ஸ்பாட்'டை எடுக்கிறது கிநோக்ராப் ஸ்டுடியோஸ். 'நானே இயக்கி, தயாரித்து ஒரு சைலன்ட் மூவி ஒன்றை எடுக்கிறேன். அது மெகா ஹிட் ஆகும்' என சவால் விட்டு நாயகன் எடுக்கும் படம்தான் டியர்ஸ் ஆப் லவ். ஆனால் அது தோல்வியை தழுவுகிறது. பெப்பி நடிக்கும் ஷாடோ உள்ளிட்ட படங்கள் தொடர் வெற்றியைப்பெற ஆரம்பிக்கின்றன. என்னதான் புகழின் உச்சியில் இருந்தாலும் ஜார்ஜ் மீது இருக்கும் அன்பை மட்டும் தொடர்கிறாள் பெப்பி.  மனைவியின் பிரிவு, ஏகப்பட்ட கடன், டாக்கிங் மூவிக்களின் எழுச்சி என அனைத்தும் ஜார்ஜை சிரமத்திற்கு ஆளாக்கியதன் விளைவாக வீட்டையும் ஏலத்திற்கு விடுகிறார். மீதிக்கதையை திரையில் காண்க நண்பர்களே. 

                                                                                                                                           
ஜார்ஜாக ஜீனும், பெப்பியாக பெரினைசும் நடிப்பில் அருமையாக ஸ்கோர் செய்கின்றனர். ஹாலிவுட் கொண்டாடும் நாயகன் எனும் பூரிப்பு, மௌனப்படங்களை ஒதுக்க சிலர் எண்ணுகையில் ஏற்படும் கோபம், அனைத்தையும் இழந்தபின் ஏற்படும் சோகம் என ஜார்ஜ் நடித்து இருப்பதற்கு விருதுகள் குவிவது ஆச்சர்யமில்லைதான். படம் நெடுக அவருடன் வரும் நாயும் நன்றாகத்தான் நடித்துள்ளது. குறிப்பாக ஹீரோ துப்பாக்கியால் சுடுவது போல் சிக்னல் செய்தால் உடனே கீழே விழுவது போல் நாய் நடித்திருப்பது நம் முகத்தில் புன்னகையை படர விடுகிறது. 'வித் ப்ளெஷர்' என்று ஒரே ஒரு முறை மட்டும் வாய்திறக்கிறார் ஜார்ஜ். 

ஜார்ஜின் வீழ்ச்சி மற்றும் பெப்பியின் வெற்றி மாறி மாறி வருகையில்  திரைப்பட ஸ்டில்களே கதையை அழகாக புரிய வைக்கின்றன. உதாரணம்: ஜார்ஜ் தெருவை க்ராஸ் செய்கையில் கண்ணில் படும் 'லோன்லி ஸ்டார்' விளம்பரம். முக்கியமான இடங்களில் கேரக்டர்கள் பேசுகையில் ஸ்லைட் போடுவது ஆறுதல். தோல்விகளை சந்திக்கும் ஜார்ஜை மனைவி திட்டுகிறார் இப்படி "எப்போதுதான் பேசப்போகிறீர்கள்?'". பிடிவாதம் வேண்டாம். டாக்கிங் மூவீக்களில் நடியுங்கள் என்பதை அர்த்தமாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் வசனம். க்ளாஸ். சொந்தப்படம் ப்ளாப் ஆன வருத்தத்தில் இருக்கும் ஹீரோவை முன்னணி நாயகி பெப்பி பார்க்க வருகிறார்.  அப்போது "ஜார்ஜ், நீங்கள் எடுத்த 'டியர்ஸ் ஆப் லவ்' பார்த்தேன்". ஜார்ஜின் பதில் "அதற்காக ரீபன்ட் கேட்க வந்துள்ளாயா?". சிம்பிள் அண்ட் சூப்பர் ஹ்யூமர்!!

முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ளது தி ஆர்டிஸ்ட். ஒரிஜினாலிட்டி அப்படியே இருக்கவேண்டும் என்பதால் 1927-1932 கால கட்டத்தில் இருந்த அச்சு அசல் ஒலிகளையே பயன்படுத்தி உள்ளனர். பின்னணி இசை வெகு ஜோர். க்ளைமாக்சில் ஹீரோ, ஹீரோயின் ஆடும் டான்ஸ் கண்களுக்கு விருந்து. போட்ட காசுக்கு மேல் பலமடங்கு சம்பாதித்து,  ஏகப்பட்ட விருதுகளையும் அள்ளிவிட்டு  இப்போது இந்தியாவிற்கு வந்துள்ளார் மேல்நாட்டு கலைஞர்(The Artist). தவற விட வேண்டாம் (உலக) சினிமா ரசிகர்களே!!   

தி ஆர்டிஸ்ட் -  உலகமே பேசும் பேசாப்படம்!!
......................................................................................................

ப்ளாஷ்:
சிறந்த நடிகர், உடை அலங்காரம், படம், இயக்குனர், என நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்ற தி ஆர்டிஸ்ட் அணிக்கு வாழ்த்துகள்!!
......................................................................................................




4 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இந்த வார ஆனந்த விகடன்ல இந்தப் படத்தப் பத்தி படிச்சேன்,உன்னோட விமர்சனமும் படிச்சப் பிறகு படம பாக்கணும் போல இருக்கு சிவா...
நன்றி..

ஹாலிவுட்ரசிகன் said...

நம்ம கருந்தேளாருக்கு படம் பிடிக்கலையே. உங்களுக்கு பிடித்திருக்கே...

Opinions differ ... என் பார்வை பற்றி பார்த்ததும் எழுதுகிறேன். விமர்சனத்திற்கு நன்றி பாஸ்.

கே.ஆர்.பி.செந்தில் said...

பாக்கலாம்:)))

மனசாட்சி said...

ம்..

Related Posts Plugin for WordPress, Blogger...