DEFEAT THE DEFEAT BEFORE THE DEFEAT DEFEATS YOU

Monday, February 13, 2012

தோனி


                                                                          
                                                                       
இவ்வாண்டு தொடர்ச்சியாக கல்வி சம்மந்தப்பட்ட படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. நண்பன், மெரினா..இப்போது தோனி. பிரகாஷ்ராஜின் டூயட் மூவீஸ் தயாரிப்பு என்பதால் நம்பிக்கை வீண் போகவில்லை. இயக்கமும் அவர்தான். சுப்புவாக நடிக்க என்னை விட்டால் ஆளில்லை என்பதை நிரூபித்து இருக்கிறார் 'தோனி' யின் கேப்டன் பிரகாஷ்ராஜ்.

கிரிக்கெட் கேப்டன் தோனியின் தீவிர ரசிகனாக இருக்கும் கார்த்திக்கிற்கு படிப்பு மட்டும் எட்டாக்கனி. கடைநிலை கவர்மென்ட் ஊழியராக இருக்கும் சுப்பு ஊறுகாய் பாட்டில் விற்பனையை சைடில் செய்தும், கந்து வட்டிக்கு கடன் வாங்கியும் பிள்ளைகளை படிக்க வைக்கிறார். திடீரென ஏற்படும் ஒரு விபத்தால் மகன் முடங்கிப்போகிறான். இதை சுப்பு எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை. 

தோனி ரசிகனாக வரும் ஆகாஷின் நடிப்பு இயல்பு. அவனுடைய கோச்சாக நாசர். வழக்கம்போல் மிளிர்கிறார். நவரச நடிப்பின் மூலம் திரையை ஆக்ரமித்து அட்டகாசம் செய்கிறார் பிரகாஷ்ராஜ். என் மகனுக்கு படிக்க வராது என்று சொல்லி ஏன் அவனை புறம்தள்ளுகிறீர்கள் என்று சீறும் காட்சிகளில்..என்னா நடிப்புய்யா!! "சொல்லுங்க. 17 * 8 எவ்ளோ சொல்லுங்க"  என்று ஆசிரியர்களை உலுக்கும்போது நம்மையும் சேர்த்து உறைய வைக்கிறார் இந்த மனிதர். குறிப்பாக நீயா நானா நிகழ்ச்சியில் கதறி அழும்போது கண்டிப்பாக இவ்வாண்டிற்கான தேசிய விருதை தன் வசப்படுத்தி விடுவார் என்று தெரிகிறது. இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்கள் பட்டியலில் தவிர்க்கவே முடியாத ஆளாக இருக்கப்போவதை மீண்டும் உறுதி செய்துள்ளது பிரகாஷ்ராஜின் நடிப்பு.  

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தோனியை படமாக்கி உள்ளதால் பிரம்மானந்தம் உள்ளிட்ட சில தெலுங்கு நடிகர்களும் திரையில் வருகின்றனர். முக்கிய கேரக்டராக வரும் ஆகாஷ் மற்றும் சிலருக்கு டப்பிங் தந்து இருப்பது படத்தோடு ஒட்டவில்லை. கூட கொஞ்சம் செலவு ஆனாலும் பரவாயில்லை. அந்தந்த மொழி பேசத்தெரிந்த நடிகர்களை(நாயகிகளை விடுங்கள். அது நடக்காத காரியம்)  வைத்தே காட்சிகளை அமைத்தால் என்ன? "ஒரேய்.." என்று உரக்க கத்தும் படங்களுக்கு டப்பிங் வைத்தால் கவலை இல்லை. ஆனால் இது போன்ற நல்ல கதைகளுக்கு இடையூறாக இருக்கிறது இந்த செயற்கையான வாயசைப்பு. 

                                                                         
பிரம்மானந்தம், சாம்ஸ், சிங்கமுத்து ஆகியோர் இருந்தும் நாம் சிரிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. கந்து வட்டி கனி பாய் ஆக வரும் முரளி கடைசி சில காட்சிகளில் மட்டும் கொஞ்சம் நெகிழ வைக்கிறார். எந்த கேரக்டரையும் தன் சிறப்பான நடிப்பால் மெருகேற்றும் தலைவாசல் விஜய் இதில்  மருத்துவராக நடித்து இருக்கிறார். எங்க சார் போனீங்க நீங்க எல்லாம்? வீ மிஸ் யூ. 'வாங்கும் பணத்துக்கும்' பாடலில் கருத்து சொல்லிவிட்டு போகிறார் பிரகாஷ்ராஜின் நெருங்கிய 'நண்பேன்டா' பிரபுதேவா. கூல் பெர்பாமன்ஸ். 

இசை இளையராஜா. 'தாவி தாவி போகும்' பாட்டை பாடி மனதை வருடுகிறார். மற்ற பாடல்கள் சுமார். முதல்வரை சந்திக்க பிரகாஷ்ராஜ் போராடும் முக்கியமான காட்சியில் பின்னணி இசை ஈர்ப்பை தரவில்லை. நம்பமுடியவில்லை அது இளையராஜாவின் கைவண்ணமென்று. பிரகாஷ்ராஜின் பிரமாதமான நடிப்பு, நச் என்று இருக்கும் வசனங்கள் மட்டுமே தோனியை அவுட் ஆக்காமல் காப்பாற்றுகின்றன. 50% தெலுங்கு டிராமா பார்த்த  உணர்வு வருமாறு சீன்களை தவிர்த்து இருந்தால் மேன் ஆப் தி சீரிஸ் (சிறந்த சினிமா 2012) விருதை வென்றிருப்பான் இந்த தோனி. கடைசி சீன்..க்ளிஷே!!

சில குறைகள் இருந்தாலும் போர் அடிக்காமல் நகரும் காட்சிகள்(குறிப்பாக இரண்டாம் பாதி), ரசிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் வசனங்கள் மூலம் தன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் டூயட் மூவிஸ் கேப்டன். அனைவருக்குமான படம். தவற விட வேண்டாம். 

தோனி - பவுண்டரிகளை தாண்டி!!
....................................................................................

'ராஜா'ங்கம்: 

படம் முடிந்து டைட்டில் போடுகையில் மீண்டும் ஒலித்த இப்பாடலை கேட்டுவிட்டே அரங்கை விட்டு வெளியேறினேன். இன்னும் எத்தனை முறை கேட்கப்போகிறேன் என்று தெரியவில்லை. இசைஞானி...நீயே உனக்கு என்றும் நிகரானவன்!! 




.......................................................................................

.............................
My other site:
...............................

........................................................
சமீபத்தில் எழுதியது:
ஸ்பெஷல் மீல்ஸ்(12/02/12)
........................................................



15 comments:

ஜீ... said...

அப்போ பாத்துடலாம்கிறீங்க!

ஜீ... said...

//முக்கிய கேரக்டராக வரும் ஆகாஷ் மற்றும் சிலருக்கு டப்பிங் தந்து இருப்பது படத்தோடு ஒட்டவில்லை//
ஆகா..ஏன் பாஸ் இப்பிடியெல்லாம் பண்றாங்க? கதாநாயகின்னா கூட டப்பா மசாலா படங்களுக்கு மட்டும் ஓக்கே! ம்ம்ம்..

ஜீ... said...

/அனைவருக்குமான படம். தவற விட வேண்டாம்//
ரைட்டு! யாராவது படம் பார்த்து காண்டானா அண்ணனை வந்து கும்மலாம்! :-)

விக்கியுலகம் said...

உங்க விமர்சன ஸ்டைல் மெருகேறிக்கிட்டே வருது மாப்ளே...

“அழுகைன்னா நம்மூர்ல மார்ல அடிச்சிக்கிட்டு அழரது தான்னு பன்ஞ் வச்ச பிரகாஷ்”...இதுல கலக்கி இருக்காரு போல...படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்..மற்றும் பகிர்வுக்கு நன்றிகள்!

! சிவகுமார் ! said...

@ ஜீ

பார்க்க வேண்டிய படம்தான் ஜீ. இரு மொழி சார்ந்த நடிகர்களை தனித்தனியாக வைத்து படமாக்கும் செலவை மிச்சப்படுத்த இப்படி செய்கிறார்கள். என்னங்க கதாநாயகிகளை பத்தி இப்படி சொல்லிட்டீங்க? மணிரத்னம் படம் முதல் பேரரசு படம் வரை...எந்த ஹீரோயின் குயில் குரல்ல பேசி இருக்காங்க? ஆல்மோஸ்ட் டப்பிங்தான். நமக்கு பழகி போச்சி.

! சிவகுமார் ! said...

@ விக்கி

நன்றி மாம்ஸ். பெற்றோர்கள் அவசியம் பார்க்கணும். மிஸ் பண்ணிடாதீங்க.

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நல்லதோர் அலசல்,

பிரகாஷ்ராஜ் இன் நடிப்பிற்காகவும், படத்தின் கதைக்காகவும் இப் படத்தினைப் பார்க்க வேண்டும் என உங்கள் விமர்சனம் சொல்லுகிறது.
அழகிய விமர்சனப் பகிர்விற்கு நன்றி.

! சிவகுமார் ! said...

@ நிரூபன்

கருத்திற்கு நன்றி நிரூபன்.

கக்கு - மாணிக்கம் said...

நான் பெரும்பாலும் திரை விமர்சனங்கள் பக்கமே செல்வதில்லை.
ஆனால் "டோனி" மீது பிரகாஷ் ராஜின் மேல் உள்ள நம்பிக்கையால் உங்கள் விமர்சனம் படித்தேன்.

அழகான ஒன்று. விமர்சனம் என்றபெயரில் பதிவர்கள் வெளுத்து வாங்குவார்கள் அநியாயமாக. ஆனால் உங்களின் விமர்சனம்
நேர்மையாக, உண்மையாக ஒரு ரசிகனின் பார்வையில் அமைந்துள்ளது.
பகிர்வுக்கு நன்றி.

பதிவின் இறுதியில் "நம் ராக தேவனின்" அற்புதமான பாடல். நல்ல ரசனை தானையா உங்களுக்கு :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல படம்தான் போல, பிரகாஷ்ராஜை நம்பி பார்க்கலாம்... ஷார்ப்பான விமர்சனம் சிவா!

மாலதி said...

.படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்..மற்றும் பகிர்வுக்கு நன்றிகள்!

! சிவகுமார் ! said...

@ கக்கு மாணிக்கம்

வித்யாசமான களம். இளையராஜாவிற்கு 'டெஸ்ட்' தான். இந்த ஒரு பாடல் போதும் ரசிகர்களுக்கு. வருகைக்கு நன்றி.

! சிவகுமார் ! said...

@ பன்னிக்குட்டி ராமசாமி

பேசப்பட வேண்டிய சப்ஜெக்டை கையில் எடுத்துள்ளார் பிரகாஷ்ராஜ். நேரம் கிடைத்தால் அவசியம் பாருங்கள்.

! சிவகுமார் ! said...

@ மாலதி

நன்றி மாலதி

Kumaran said...

ஆவலை ஆழமாக தூண்டக்ககூடிய விமர்சனம்..மிகவும் சிறப்பாக உள்ளது..நன்றிகள்/

Related Posts Plugin for WordPress, Blogger...